மினி லாரி கார் மீது மோதி விபத்து- 3 பேர் படுகாயம்
திருத்தணி, 29 மார்ச் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முருக்கம்பட்டு பகுதியில் திருத்தணி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த மினி லாரி காரின் மீது மோதிய விபத்தில்
விபத்து


திருத்தணி, 29 மார்ச் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்

முருக்கம்பட்டு பகுதியில் திருத்தணி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்திசையில் வந்த மினி லாரி காரின் மீது மோதிய விபத்தில் காரில் பயணம்

செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர்

அங்கிருந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், திருப்பூர் மாவட்டம் பூண்டி பகுதியைச் சேர்ந்த சேதுராமன்(58) அவரது மனைவி மகேஸ்வரி(55) மகள் ராஜேஸ்வரி(23)

இவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திருத்தணி நோக்கி வந்த போது எதிர் திசையில் வந்த மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Hindusthan Samachar / GOKILA arumugam