பழனி தொகுதியை கேட்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
திண்டுக்கல், 29 மார்ச் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத் தொகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாகவே பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன
எல்.முருகன்


திண்டுக்கல், 29 மார்ச் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத் தொகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாகவே பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் ரகசிய யாகத்தை முடித்துவிட்டு வெளியேற முயன்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் காரை நூற்றுக்கணக்கான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அதிரடியாக முற்றுகையிட்டனர்.

மத்திய இணையமைச்சரின் கார் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள்,

பழனி தொகுதியை மீண்டும் பாஜகவிற்குப் பெற்றுத் தர வேண்டும்.

அதற்குத் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆவேசமாக முழக்கமிட்டனர்.

பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்த எங்களை ஏமாற்றாதீர்கள் எனத் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ன்றனர்.

இதன் காரணமாக, தொகுதி பங்கீட்டில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam