திருச்செங்கோடு தொகுதியில் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் வேட்பாளர் அறிவிப்பு – தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாக கொண்டாட்டம்
சென்னை, 29 மார்ச் (ஹி.ச) விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியானதும், திருச்ச
Arun


Js


சென்னை, 29 மார்ச் (ஹி.ச)

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானதும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பெரும் உற்சாகம் காணப்பட்டது.

வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, தொகுதி நிர்வாகிகள் அண்ணா சிலை அருகில் திரண்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சேலம் சாலையில் உள்ள சட்டமன்ற தொகுதி அலுவலகம் அருகிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் பெருமளவில் திரண்டு, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

அங்கு கட்சி கொடிகள் ஏந்தி “விஜய் வாழ்க”, “தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும்” போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி அளவிலான பல்வேறு நிர்வாகிகள், இளைஞர் அணியினர், பெண்கள் அணி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மகிழ்ச்சி கொண்டாடினர்.

வேட்பாளர் அறிவிப்பால் திருச்செங்கோடு தொகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மத்தியில் தேர்தல் உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ