Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.)
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புனித சார் தாம் யாத்திரை 2026-ஆம் ஆண்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
யாத்திரையின் தொடக்கமாக, யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆலயங்கள் ஏப்ரல் 19-ஆம் தேதி பக்தர்களுக்காக திறக்கப்படும்.
தொடர்ந்து, கேதார்நாத் தாம் மற்றும் பத்ரிநாத் தாம் ஆலயங்கள் முறையே ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன.
சார் தாம் யாத்திரை, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்களுக்கான புனிதப் பயணங்களை உள்ளடக்கியது.
இந்த ஆண்டு நடைபெறும் யாத்திரை இந்து சமயத்தின் மிக முக்கியமான ஆன்மீக பயணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்வர்தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,
பக்தர்களுக்கான ‘சார் தாம் யாத்திரை’ பாதுகாப்பாகவும், எந்த தடையும் இல்லாமல் நடைபெறுவதை அரசு உறுதி செய்து வருகிறது. எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடனும், உறுதியான சங்கற்பத்துடனும் யாத்திரையை பிரம்மாண்டமானதும், தெய்வீகமானதும், சீரானதும் பாதுகாப்பானதும் அமைக்க பணியாற்றி வருகிறது
பக்தர்களின் நம்பிக்கை, வசதி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆன்மீக, புனித மற்றும் ஆற்றல்மிக்க யாத்திரையில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களையும் மனமார்ந்து வரவேற்கிறோம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்று குறிப்பிட்டிருந்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM