சீட் கிடைக்காத அதிருப்தி? வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் பதவி விலகல்
சென்னை, 29 மார்ச் (ஹி.ச.) திமுகவில் வீரபாண்டி ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்த வெண்ணிலா சேகர், தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார். வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை தமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அதி
Vennila


சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)

திமுகவில் வீரபாண்டி ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்த வெண்ணிலா சேகர், தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை தமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் திமுக தலைமைக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில், குடும்ப சூழல் காரணமாக தான் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த நிலையில், திடீரென வந்த இந்த முடிவு வீரபாண்டி தொகுதி திமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்தல் சூழ்நிலையில் முக்கிய நிர்வாகி ஒருவர் பொறுப்பை ராஜினாமா செய்திருப்பது அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், வீரபாண்டி தொகுதியில் யாருக்கு கடந்த முறை போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட டாக்டர் தருணுக்கு இந்த முறையும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ராஜினாமா திமுக உள்ளக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ