Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 29 மார்ச் (ஹி.ச.)
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை சாம்பல் புதனுடன் தொடங்கியது.
இதிலிருந்து ஏழு வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிககளில் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.
ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' என்று முழுங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று குருத்தோலை ஞாயிறு நிகழ்வை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்கள் இணைந்து குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர்.
ஆலங்குளம் அண்ணா நகர் நல் மேயப்பர் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் ஆயர்கள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.
இதைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
Hindusthan Samachar / vidya.b