அய்யனார் கோயில் மாசிமகம் திருவிழா - குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
புதுக்கோட்டை, 03 மார்ச் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத்தை முன்னிட்டு 33 அடி உயரத்தில் உள்ள பிரமாண்ட குதிரை சிலையை காண லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கி
அய்யனார் கோவில்


புதுக்கோட்டை, 03 மார்ச் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத்தை முன்னிட்டு 33 அடி உயரத்தில் உள்ள பிரமாண்ட குதிரை சிலையை காண லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலின் சிறப்பே

பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் அணிவிப்பது தான் நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் லாரி, கார், வேன்கள் மூலம் பூ மாலை மற்றும் காகிதப் பூ மாலைகள் 3000-க்கும் மேற்பட்ட அணிவிக்கப்பட்டது.

அதில் உப்புவிடுதி பகுதியை சேர்ந்த விஜய், செல்வம் ஆகியோர் வேண்டுதலுக்கு

ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசு மாலை கட்டி வந்து குதிரைக்கு காணிக்கையாக

செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam