தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் பரிதாப பலி
தூத்துக்குடி, 30 மார்ச் (ஹி.ச.) தூத்துக்குடி தாளமுத்து நகர் டேவிஸ்புரம் ரோட்டில் வசிக்கும் ஐயம்பெருமாள் மகன் நட்டார் (30) தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே நிலத்தில் கிடை போட்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை 11:30 ம
26 Sheep Tragically Killed


தூத்துக்குடி, 30 மார்ச் (ஹி.ச.)

தூத்துக்குடி தாளமுத்து நகர் டேவிஸ்புரம் ரோட்டில் வசிக்கும் ஐயம்பெருமாள் மகன் நட்டார் (30) தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே நிலத்தில் கிடை போட்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இன்று காலை 11:30 மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்காக தூத்துக்குடி துறைமுகம் மதுரை பைபாஸ் ரோடு ஜோதி நகர் அருகே ரோட்டை கடந்து ஆடுகள் சென்ற போது துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றுக் கொண்டு வேகமாக வந்த ஒரு லாரி ஆடுகள் மீது சரமரியாக மோதியது.

இதில், 26 ஆடுகள் துடி, துடித்து இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தன.

மேலும், 20க்கு மேற்பட்ட ஆடுகள் சிறு காயத்துடன் உயிர் தப்பியது. பின்னர், லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஆட்டின் உரிமையாளர் மற்றும் சங்கர பேரி பொதுமக்கள் நடுரோட்டில் கூட்டமாக நின்றனர்.

இது குறித்து, தகவல் அறிந்த சிப்காட் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெபின் செல்வபிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி நடுரோட்டில் இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று லாரியை ஓட்டி வந்த டிரைவர் யார்? அதன் உரிமையாளர் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b