பா.ஜ.க அதிக இடங்கள் கைப்பற்றும் – அசாம் மாநில நிதியமைச்சர் அஜந்தா நியோக் நம்பிக்கை
கோலாகாட், 30 மார்ச் (ஹி.ச.) அசாம் மாநிலத்தில் 2001 முதல் கோலாகாட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் அஜந்தா நியோக், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், 2026 அசாம் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்
Assam State Finance Minister Ajanta Neog


கோலாகாட், 30 மார்ச் (ஹி.ச.)

அசாம் மாநிலத்தில் 2001 முதல் கோலாகாட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் அஜந்தா நியோக், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.

2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், 2026 அசாம் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிதுபன் சாய்கியாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

2021 தேர்தலில், கோலாகாட் தொகுதியில் 81,651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நியோக், 72,326 வாக்குகள் பெற்ற பிதுபன் சாய்கியாவை 9,325 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தற்போது அசாம் மாநில நிதியமைச்சரும், கோலாகாட் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அஜந்தா நியோக், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 2021-ஆம் ஆண்டை விட அதிக இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இன்று கோலாகாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது,

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 2021-ஆம் ஆண்டை விட அதிக இடங்களை கைப்பற்றும். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் மீது மக்களின் நம்பிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதே இதற்கான முக்கிய காரணம்.

பெண் வாக்காளர்களின் பங்களிப்பை பார்க்கையில், இம்முறை வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும். குறிப்பாக பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும்.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்கும்.

மாநிலத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.40,000 கோடியாக இருந்த மாநில பட்ஜெட், பாஜக ஆட்சியில் தற்போது ரூ.1,50,000 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருமளவிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் அரசின் சாதனைகளாக விளங்குகின்றன.

வாக்காளர்கள் இப்போது வாக்குறுதிகளைக் காட்டிலும் செயல்திறனை முக்கியமாகக் கருதுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

126 இடங்கள் கொண்ட அசாம் சட்டமன்றத்தில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கின்ற நிலையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b