பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று விலகுகிறார் பாஜக தலைவர் நிதின் நபின்
பாட்னா, 30 மார்ச் (ஹி.ச.) பீகாரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பாங்கிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இன்று அறிவித்தார். இது தொடர்பாக நிதின்
பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று விலகுகிறார் பாஜக தலைவர் நிதின் நபின்


பாட்னா, 30 மார்ச் (ஹி.ச.)

பீகாரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பாங்கிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக நிதின் நபின் தனது சமூக வலைத்தள பதிவில்,

இன்று, பாங்கிப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியிலிருந்து விலகுகிறேன். கட்சி எனக்கு வழங்கிய புதிய பொறுப்பின் வாயிலாக, என் தொகுதி மற்றும் முழு பீகாரின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணித்து உழைப்பேன். என் கட்சித் தொண்டர்களுடனும், பீகார் மக்களுடனும் உள்ள உறவு என்றும் நிலைத்திருக்கும்; அது எனக்கு எப்போதும் புதிய உற்சாகம், வழிகாட்டுதல் மற்றும் சக்தியை வழங்கி வருகிறது.

மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில், 2047-ஆம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' மற்றும் 'வளர்ச்சியடைந்த பீகார்' என்ற கனவுகளை நனவாக்க முயற்சியில் நான் தொடர்ச்சியாக உழைப்பேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 16-ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தல்களில், நிதிஷ் குமார் மற்றும் நிதின் நபின் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய அரசியலமைப்பின்படி, ஒரே நேரத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி வகிக்க முடியாது என்பதால், நிதின் நபின் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM