Enter your Email Address to subscribe to our newsletters

சங்காரெட்டி, 30 மார்ச் (ஹி.ச.)
தெலங்கானா சங்காரெட்டி மாவட்டம் பொல்லாரம் பகுதியில் உள்ள மூன்று அடுக்குக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து முதல் ஆறு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.
தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் ஒரு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து குகட்பள்ளியைச் சேர்ந்த தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும், உடனடியாக வந்த தீயணைப்பு வாகனம் தீயை அணைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஐந்து முதல் ஆறு இருசக்கர வாகனங்கள் தீயில் முற்றிலும் கருகி சேதமடைந்தன என்றும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Hindusthan Samachar / JANAKI RAM