Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 மார்ச் (ஹி.ச.)
கோவையையடுத்து குரும்ப்பாளையத்தில் இருக்கும் எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.
அந்த பேருந்தில் மாணவர்கள் பாட்டுப் பாடி நடனமாடி மகிழ்ச்சியாக சென்றனர்.
அந்த பேருந்து கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் அருகே உள்ள பகவான் ஹால் பகுதியில் சென்ற போது திடீரென போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்பொழுது அந்தப் பேருந்தில் முன் பகுதியில் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராஹீம் பெயர் எழுதப்பட்டு இருந்தது.
மேலும் டான் அண்டர்வேல்டு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தவிர பல வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
இதனை அடுத்து போலீசார் அந்த பேருந்து பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் அந்த பேருந்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அத்துடன் போலீசார் அந்த பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
அதில் இருந்து மாணவர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கோவை காவல் அதிகாரிகள் கூறும் போது :-
பேருந்துகள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் மட்டுமே எழுதப்பட்டு இருக்க வேண்டும், வாகனங்களில் எழுதும் வாசகங்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது.
அப்படி எழுதப்பட்டு இருப்பது வாகன சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக கோவை மாநகரம் மற்றும் புறநகர வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / Durai.J