டெல்லி புல் பிரஹலாத் நகரில் எரிவாயு சிலிண்டரால் மனைவியைக் கொன்ற கணவன்
புதுடெல்லி, 30 மார்ச் (ஹி.ச.) டெல்லி புல் பிரஹலாத் நகர் பகுதியில் கணவன்-மனைவி தகராறில் எரிவாயு சிலிண்டரால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததார். கொலையாக முடிந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில
டெல்லி புல் பிரஹலாத் நகரில் எரிவாயு சிலிண்டரால் மனைவியைக் கொன்ற கணவன்


புதுடெல்லி, 30 மார்ச் (ஹி.ச.)

டெல்லி புல் பிரஹலாத் நகர் பகுதியில் கணவன்-மனைவி தகராறில் எரிவாயு சிலிண்டரால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததார்.

கொலையாக முடிந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில் நிகழ்ந்தது.

தகவல் அறிந்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தம்பதியிடையே இதற்கு முன்பு சண்டை சச்சரவுகள் ஏதும் நடந்ததாகத் தாங்கள் கேட்டதே இல்லை என்று அண்டை வீட்டார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உயிரிழந்தவரின் உடலை மீட்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கணவர் கைது செய்யப்பட்டார்

சம்பவம் குறித்து அப்பகுதி குடியிருப்பாளர் சுக் பால் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேல்தளத்தில் கடும் தகராறு நடைபெறுவதாக அண்டை வீட்டார் தகவல் அளித்தனர். இதையடுத்து, நாங்கள் உடனடியாக அங்கு சென்று, கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து உள்ளே நுழைந்தோம்.

அப்போது, எரிவாயு சிலிண்டர் ஒன்று கிடப்பதையும், தரையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்தோம் என்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM