Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி, வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் விஜய்யின் வாகனத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும் போக்குவரத்தைச் சரி செய்யாமல் இருப்பதால் பிரசாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அம்மனுவில்,காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை மற்றும் போக்குவரத்து திட்டமிடல் இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு வழங்காததால், பெரம்பூரில் இருந்து கொளத்தூர் வரை உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b