Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று
(மார்ச் 30) திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை பலரும் பாராட்டும் வகையில் உள்ளது . பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என்பது இலவசத் திட்டம் கிடையாது. அதன் மூலம் பெண்கள் 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தைத் தேடிக்கொள்ளும் ஒரு சோசியல் இன்வெஸ்ட்மென்ட் திட்டம்.
அதிமுக தேர்தல் அறிக்கையை படிக்கக்கூட எங்களுக்கு நேரமில்லை. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம், வீடு தேடி மருத்துவம் போன்ற சொல்லப்படாத திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார்.
மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பால் தான் நிறைவேற்ற முடியும் என்கிற காரணத்தால் அவை நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. மீது 64 திட்டங்கள் அப்பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.
80,000 பேரிடம் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். ஒவ்வொரு துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுகதான் திமுகவின் திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டு கொண்டே போகும். அப்படியிருக்க திமுகவின் தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்தை எப்ஐஆர் கூட பதிவிட முன்வராமல், குற்றவாளிகளை காப்பாற்ற அத்தனை முயற்சிகளை செய்தது அதிமுக. ஆனால், திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார்.
சமையலறையில் இருந்து சீக்கிரம் விடுதலை கிடைப்பதற்கான திட்டம்தான் இந்தக் கூப்பன் திட்டம்.ஒரு வாஷிங் மெஷின் வாங்கும்போது கையில் துவைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் குறையும். பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும்போதும் அவர்களது நேரம் சேமிக்கப்படும்.
அந்த நேரத்தில் அவர்கள் வேறு வேலைகளைச் செய்ய இயலும். இது இன்னொரு முதலீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கூப்பன் கொடுக்கும்போது ‘இந்தப் பொருட்களைத்தான் நீங்கள் வாங்க வேண்டும்’ என்ற கட்டாயம் இல்லை. எங்கள் வீட்டில் ஏற்கெனவே ஒரு பிரிட்ஜ் இருக்கலாம்.
அப்படி இருக்கும்போது நாம் மீண்டும் பிரிட்ஜ் கொடுப்பது அவர்களுக்கு பயனற்றதாக மாறிவிடும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b