Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 30 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான
மதுசூதனப்பெருமாள் கோவில் குமரியின் குருவாயூர் ஆகவும் தங்கக்கொடி மரம் உடைய
கோவிலாகவும் திகழ்கிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர் திருவிழா
பத்து நாட்கள் நடை பெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த
வாரம் கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்பதாம் திருவிழா
சிகர நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் காலை 10:30 மணியளவில் தொடங்கியது.
சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருள தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள்
சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரண்டாவது தேரில் அலங்காரத்துடன்
விநாயகர் எழுந்தருள வீதி உலா உலா வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை மதுசூதனபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இரவு 9.30 மணிக்கு சப்தா வர்ண நிகழ்ச்சியும், பத்தாம் திருவிழாவான நாளை பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட
வாகனத்தில் சுவாமி ஆராட்டு துறைக்கு எழுந்தருளல், இரவு 11- மணிக்கு தெப்பத்
திருவிழாவும் நடைபெறுகிறது.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற
உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam