Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 30 மார்ச் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகபிரியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பாக 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலிலும், 2021ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில் தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகபிரியா இன்று மானாமதுரை தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஏர் கலப்பை மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களோடு நடை பயணமாக 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜா சிங் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam