மாட்டு வண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு  தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் வேட்பாளர்!
தூத்துக்குடி, 30 மார்ச் (ஹி.ச.) வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில
நாதக


தூத்துக்குடி, 30 மார்ச் (ஹி.ச.)

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

பாலாஜி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக,

விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில்

இருந்து ஏராளமான நாம் தமிழர் கட்சியினருடன் விவசாயிகளின் அடையாளமான மாட்டு

வண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு “ தாரை தப்பட்டை” அடித்து ஆரவாரத்துடன்

ஊர்வலமாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

தேர்தல் நடத்தை விதியின் காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்யும் விளாத்திகுளம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு அரசியல்

கட்சி வாகனமோ, அரசியல் கட்சியினர் கூட்டமாகவோ செல்லக்கூடாது என்று

காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி

உட்பட நான்கு பேர் மட்டும் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல்

நடத்தும் அலுவலர் சுபாவிடம், வேட்பு மனுவை பூர்த்தி செய்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

பொறியியல் பட்டதாரியான (B.E.) நாம்தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Hindusthan Samachar / GOKILA arumugam