Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 மார்ச் (ஹி.ச.)
மேற்கு ஆசிய போரால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது.
இன்று காலை மக்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மேற்கு ஆசிய போரால் நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் மதியம் 12.30 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியம் 12.30 மணிக்கு பிறகு அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்றது.
அதே நேரத்தில் மேல்சபை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b