பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் -அம்பேத்கர் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை, 30 மார்ச் (ஹி.ச) பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப
Per


சென்னை, 30 மார்ச் (ஹி.ச)

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதனை முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட உள்ள விஜய், இன்று தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலகமாக செயல்படும் அம்பேத்கர் கல்லூரி வளாகத்தில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கூடும் சூழ்நிலை இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் தடுக்க நகர போலீசார் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் பவுண்சர்களும் கல்லூரி வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் போலீசாரும், தனியார் பாதுகாப்பு பணியாளர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ