Enter your Email Address to subscribe to our newsletters

டேராடூன், 30 மார்ச் (ஹி.ச.)
டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோஹ்ரி கிராமத்தில், இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற ராணுவ பிரிகேடியர் வி.கே. ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜோஹ்ரி கிராமத்திலுள்ள ‘துலா அபார்ட்மெண்ட்ஸ்’ அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றது.
அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சூடு நடத்தியதில், ஜோஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரம்பக் கட்ட விசாரணையில், இரண்டு வாகனங்களில் வந்த நபர்களுக்கிடையேயான வாக்குவாதம் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நேரத்தில் அருகில் நடைப்பயிற்சியில் இருந்த ஜோஷியை குறிவைக்காமல் பாய்ந்த குண்டு தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM