Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.
இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடவுள்ள தவெக தலைவர் விஜய், வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
இதே போல் கொளத்தூர் தொகுதியில் 4வது முறையாக போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் தாக்கல் இன்று தாக்கல் செய்தார்.
Hindusthan Samachar / vidya.b