சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேட்புமனு தாக்கல்
சென்னை, 30 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. அதேபோல் தேர்தல
சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேட்புமனு தாக்கல்


சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன.

அதேபோல் தேர்தல் பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது.

விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் மு.க.ஸ்டாலின், சீமான், விஜய் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தவெக விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவில் போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

அதேநேரம் வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய செங்கோட்டையன் ஊர்வலமாகச் சென்றுள்ளார்.

இன்னும் சிறிது நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

திண்டுக்கல், கரூர், ஈரோடு ஆகிய இடங்களிலும் வேட்புமனு தாக்கல் தீவிரமடைந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b