Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது .இதற்கு தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது.
இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசியல் கட்சியினர் கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மனுவை வேட்பாளர்கள் இணைய வழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்யலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கலின் போது நேரில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசியல் கட்சியினர் கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக் குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மனுவை வேட்பாளர்கள் இணைய வழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்யலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கலின் போது நேரில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் வேட்பாளர்கள் வேட்பு மனுவை இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் சமர்ப்பிக்கலாம். ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்க லின் போது நேரில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்கள், வேட்பு மனுவில் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இந்த தேர்தலில், மின்னணு ஓட் டுப்பதிவு எந்திரங்களில் வைக்கப்படும் 'பேலட் ஷீட்டில், வேட்பாளரின் கலர் போட்டோ சேர்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தேதியிலிருந்து 3 மாதத்துக்குள் எடுக்கப்பட்ட வேட்பாளரின் போட்டோவையே, வேட்பு மனுவில் இணைக்க வேண்டும்.
வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளான வருகிற 6-ந்தேதி மாலை 3 மணிக்குள் உறுதிமொழிபத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். வேட்புமனுக்களை பெற அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.
வேட்பு மனு பரிசீலனை 7-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும் பப் பெற ஏப்ரல் 9-ந்தேதி கடைசி நாளாகும்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV