இஸ்ரேல் - ஈரான் போரில் பலியான தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன் கோரிக்கை
சென்னை, 30 மார்ச் (ஹி.ச.) இஸ்ரேல் - ஈரான் போரில் பலியான தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து
இஸ்ரேல் - ஈரான் போரில் பலியான தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கைகள் எடுக்க டிடிவி தினகரன் கோரிக்கை


சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)

இஸ்ரேல் - ஈரான் போரில் பலியான தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த பரமக்குடியைச் சார்ந்த திரு செல்வம் அவர்கள் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

திரு.செல்வம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b