Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச)
நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் தனது பழைய திரைப்படமான உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மதராஸ் உயர்நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவில், “உயிருள்ளவரை உஷா” திரைப்படத்தின் பாடல்கள் தனது அனுமதி இல்லாமல் சில நிறுவனங்கள் மூலம் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன என்று டி. ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட பாடல்களின் காப்புரிமை மீறப்படுவதாக கூறி டி. ராஜேந்தர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, பழைய திரைப்பட பாடல்களின் உரிமை தொடர்பான விவகாரமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ