பவானி அருகே போக்குவரத்து அலுவலகத்துக்குள் கல்லூரி பேருந்து புகுந்து விபத்து
ஈரோடு, 31 மார்ச் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் பவானி அருகே கல்லூரி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து அலுவலகக் கட்டிடத்தில் மோதியதில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர். மற்ற மாணவர்கள் ப
விபத்து


ஈரோடு, 31 மார்ச் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம்

பவானி அருகே கல்லூரி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து அலுவலகக் கட்டிடத்தில் மோதியதில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர். மற்ற மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மலையேற்ற பயிற்சிக்காக சென்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

ஓட்டுநருக்கு பதிலாக உடற்கல்வி ஆசிரியர் பேருந்தை ஓட்டியதால் கட்டுப்பாடு இழந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய ஆசிரியர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தையடுத்து பேருந்தை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam