மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.) தமிழக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சரும் தமிழ்நாடு பா.ஜ.க பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னைவிமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தம
பியூஸ்


சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)

தமிழக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

இதற்காக டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சரும் தமிழ்நாடு பா.ஜ.க பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னைவிமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை வரவேற்றார்.

பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து,சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை சீர்கெட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த நல்ல அரசு நிர்வாகமே தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, நல்ல அரசு நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவரும். தமிழ்நாடு மக்களுக்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை என்.டி.ஏ. வழங்கும்.

வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் உள்ள இறுதி நாள் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். எங்கள் கட்சியில் வேட்பாளர் தேர்வில் எந்த காலத்தாமதமும் இல்லை. இன்று வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவே தமிழ்நாடு வந்துள்ளேன்.

இங்கிருக்கும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறோம். இன்னும் இரண்டு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, வெளியிடப்படும்.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், எங்கள் கூட்டணி குடும்பம் போல் ஒற்றுமையாக இருக்கிறது. இரண்டு ஊழல் நிறைந்த கட்சிகள் ஒன்றாக உள்ளன.

டெல்லியில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் எடப்பாடி என நாங்கள் இரட்டை இன்ஜின் அரசில், தமிழ்நாடு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J