திமுகவை தோற்கடிக்க தவெகவிற்கு தான் வலிமை உள்ளது - செங்கோட்டையன்
திருப்பூர், 31 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
செங்கோட்டையன்


திருப்பூர், 31 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திமுக அரசை தோற்கடிக்கும் வலிமை வெற்றிக் கழகத்திற்கு இருப்பதாகவும், குறிப்பாக தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்றவர் என்றும் தெரிவித்தார்.

விஜய் யாரை ஆதரிக்கிறாரோ அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், பண ஆதாரமின்றியும் மக்கள் ஆதரவால் வெற்றிக் கழகம் வளர்ந்து வரும் இயக்கமாகும் என்றும், எதிர்காலத்தில் தமிழக அரசியலில் விஜய் முக்கிய தலைவராக உருவெடுப்பார் என்றும் கூறினார்.

தமிழக அரசியலில் தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே பல்முனைப் போட்டி நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam