மது போதையில் தந்தையை குத்திக்கொன்ற டிரைவர் கைது!
பெரம்பலூர், 31 மார்ச் (ஹி.ச.) பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே கொளக்காநத்தம் காலனியை சேர்ந்த அண்ணாதுரை (50) ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் ராஜதுரை (30) டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 28ஆம் தேதி தந்தை, மகன் இருவரும் மது குடித்துவிட்டு
கைது


பெரம்பலூர், 31 மார்ச் (ஹி.ச.)

பெரம்பலூர் மாவட்டம்

மருவத்தூர் அருகே கொளக்காநத்தம் காலனியை சேர்ந்த அண்ணாதுரை (50) ஓட்டல் தொழிலாளி.

இவரது மகன் ராஜதுரை (30) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 28ஆம் தேதி தந்தை, மகன் இருவரும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது “வேலைக்கு செல்லாமல் ஏன் சுற்றித் திரிகிறாய்?” என்று தந்தை கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ராஜதுரை, அருகில் இருந்த கூர்மையான கம்பியால் தந்தையின் நெஞ்சில் குத்தினார்.

பலத்த காயமடைந்த அண்ணாதுரை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam