100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை, 31 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் படி இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர், உதவி இயக்குநர் (பயிற்சி) ஆலோசனையின்படி, சோழவந்தான
ல


மதுரை, 31 மார்ச் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் படி இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர், உதவி இயக்குநர் (பயிற்சி) ஆலோசனையின்படி,

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களுக்கு 100சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு சுவர் ஓவியம், ரங்கோலி, கையெழுத்து இயக்கம், ஒயிலாட்டம், பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்

செல்லப்பாண்டியன்

தலைமை தாங்கினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர்

ராஜமார்த்தாண்டன் தொடக்கி வைத்தார்.

இதில்

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, ரம்யா, வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், ஊராட்சி செயலாளர்கள் செல்வம், புஷ்பலதா, சுந்தரி, சரஸ்வதி, தனலட்சுமி, மகாராஜன், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J