ஒரு கேப்டனாக தொண்டனை கரை சேர்க்க தவறிவிட்டார் ஓ.பி.எஸ்-உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன்
உசிலம்பட்டி, 31 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அறிய செக்கானூரணியில் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன் அண்மையில் ஓ.பி.எஸ் உடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சட்டமன்ற தேர்தலில் மீண்டும் உசிலம்பட
A


உசிலம்பட்டி, 31 மார்ச் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அறிய செக்கானூரணியில் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன் அண்மையில் ஓ.பி.எஸ் உடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என அய்யப்பன் எதிர்பார்த்திருந்த நிலையில் உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அ.தி.மு.க தொண்டர் மீட்பு குழுவைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் பேசிய அய்யப்பன்.

ஓபிஎஸ் உடன் கடைசி வரை கூட இருந்த தனக்கு கை கொடுப்பார் என நம்பி இருந்த நிலையில் அவர் என்னை கைவிட்டு விட்டார் என ஆதங்கத்துடன் பேசிய போது,

அவரது ஆதரவாளர்களில் ஒருவர் எழுந்து ஓபிஎஸ் இடம் இருந்து விலகியவர்கள் எல்லாம் இன்று சீட்டு வாங்கி விட்டார்கள்.

உடனிருந்த உங்களை ஓபிஎஸ் ஏமாற்றி விட்டார் என ஆவேசப்பட்டு பேசியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது,

தொடர்ந்து ஓபிஎஸ் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக பலரும் ஆதங்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன்,

நாலரை ஆண்டு காலம் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன் அதைப் போல எங்களது ஆதரவாளர்கள் மு க ஸ்டாலினுக்குஆதரவாக பணியாற்றி வருகிறோம் என தெரிவித்தார்.

ஓ பி எஸ் உடன் திமுகவில் இணையும் போது உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென கேட்டேன் அதற்கு அவரும் சம்மதித்தார் ஆனால் ஏனென்று தெரியவில்லை உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஓபிஎஸ் தலைவனாக ஒரு கேப்டனாக தொண்டனை கரை சேர்த்திருக்க வேண்டும்.

ஆனால் தொண்டனை கரை சேர்க்க தவறிவிட்டார் அது ஏன் என்று தெரியவில்லை.இருப்பினும் திமுக வெற்றிக்காக பாடுபடுவோம்.

திமுகவிற்கு பணி செய்ய தங்களுக்கு இன்னும்உத்தரவு வரவில்லை.

உத்தரவு வந்ததும் தேர்தல் பணியினை தொடங்குவோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி மீண்டும் உங்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் காங்கிரஸ்க்குவழங்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,

அரசியலில் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும்.பொதுவாக கட்சிகளில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது எல்லா கட்சிகளிலும் இருக்கும்.

எனக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதற்காக நான் அரசியலில் இருந்து ஒதுங்க போவதில்லை ஏனென்றால் மக்கள் பணி செய்ய வேண்டும் என்றால் அரசியலில் இருந்து தான் செய்ய வேண்டும்.அதனால் தளபதி கரத்தை வலுப்படுத்த நான் பாடுபடுவேன்.

தைரியமாக மகிழ்ச்சியாகவும் அதை செய்வேன் எனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு தேர்தல் பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J