தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.) மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: நான் உ
Governor Rajendra Vishwanath Arlekar Extends Mahavir Jayanti Greetings


சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)

மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:

நான் உனக்கு பல விஷயங்களை போதித்திருக்கலாம். அது சரியா தவறா என்று பகுத்தாய்ந்து அதை நீ ஏற்கலாம்.

இல்லை நிராகரிக்கலாம். அதற்கு உனக்கு முழு உரிமை உண்டு என்று பகுத்தறிவைப் போதித்தவர் மகாவீரர்.

அகிம்சை, உண்மையை கடைபிடிக்கும் கோட்பாடு, பற்றின்மை என்ற முப்பெரும் பாதையில் செல்வோர் இப்பிறவிப் பிணியான பிறப்பு இறப்பிலிருந்து விடுபட்டு தெய்வமாக முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்.

அவரது வழியில் சமண தர்மத்தை பின்பற்றும், உலகெங்கிலும் வாழும் சகோதர சகோதரிகளுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b