பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்,கேரள தேர்தல் அறிக்கை - ராகுல் காந்தி அறிவிப்பு
கேரளா, 31 மார்ச் (ஹி.ச.) கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னணி சார்பில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். கோழிக்கோட்டில் பிரசாரம் செய்த அவர் தெரிவித்ததாவது: காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு
ராகுல் காந்தி


கேரளா, 31 மார்ச் (ஹி.ச.)

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னணி சார்பில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் பிரசாரம் செய்த அவர் தெரிவித்ததாவது:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்படும்.

மேலும், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்படும்.

இதனுடன், முதியோர் ஓய்வூதியம் ₹3000 ஆக உயர்த்தப்படும் என்றும், இளைஞர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் கூறினார்.

குடும்பங்களுக்கு மேம்பட்ட மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam