மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, 31 மார்ச் (ஹி.ச) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 31) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளையும் இன்று திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அர
Meat shops are closed today


சென்னை, 31 மார்ச் (ஹி.ச)

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 31) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி கடைகளையும் இன்று திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொது விடுமுறை தினமான இன்று டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்களும் நாள் முழுவதும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

அரசின் இந்த விதிமுறைகளை மீறி ரகசியமாக மது விற்பனை செய்ய முயல்பவர்கள் மீது சட்டப்படி இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b