தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டு விட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, 31 மார்ச் (ஹி.ச) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூர் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
Sh


சென்னை, 31 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூர் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

மக்களுடன் நேரடியாகச் சந்தித்து உரையாடும் நோக்கில் இந்த தேர்தல் பரப்புரைப் பயணம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொதுமக்களுடன் இரண்டறக் கலக்கும் இந்தப் பயணங்களின் மூலம் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகவும், திராவிட மாடல் 2.0-க்கு மக்களின் ஆதரவை கோரியும் இந்தப் பயணம் நடைபெறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் மத்தியில் நேரடியாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியாக இந்தப் பரப்புரைப் பயணம் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூரில் இருந்து தொடங்கப்படும் இந்தப் பயணம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு இந்தப் பயணத்தின் மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முதல்வர் மக்களை நேரில் சந்தித்து உரையாட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ