Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 31 மார்ச் (ஹி.ச.)
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று அகமதாபாத்தை சேர்ந்த சானந்த் GIDC-யில், ரூ. 3,300 கோடி மதிப்புள்ள 'கேய்ன்' (Kayne) குறைக்கடத்தி (Semiconductor) ஆலையை திறந்து வைத்தார்.
இந்த ஆலையை இந்தியாவில் இரண்டாவது முறையாக நிறுவப்பட்ட குறைக்கடத்தி தொழிற்சாலை ஆகும் .
குறைக்கடத்தித் துறையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும், மேலும் இந்தியாவின் 'குறைக்கடத்தி இயக்கம்' (Semiconductor Mission) சார்ந்த பணிகளை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதன் மூலம், தொழிற்துறை, தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி துறைகளில் இந்தியாவின் இடம் வலுப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி் கூறுகையில்,
இந்த ஆலையின் தொடக்கம், இந்தியாவை குறைக்கடத்தித் துறையில் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும் முக்கிய நடவடிக்கையாகும். இது தொழில், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும், என்று குறிப்பிட்டார்.
உதவி அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய ஆலையின் செயல்பாடு, குறைக்கடத்தித் தொழிலில் இந்தியாவின் உற்பத்தி திறனை பல மடங்கு மேம்படுத்தும். மேலும், இது உள்ளூர் மற்றும் உலக சந்தைகளில் இந்திய தொழிற்துறை போட்டித்தன்மையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆலையின் திறப்பின் போது, மாநில மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலை, மகாவீர் ஜெயந்தித் திருநாளையொட்டி, காந்திநகரில் உள்ள மகாவீர் ஜெயின் ஆராதனா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள 'கோபா தீர்த்தம்' இடத்தில் பிரதமர் மோடி 'சம்ராட் சம்ப்ரதி அருங்காட்சியகத்தையும்' திறந்து வைத்தார்.
இதன் மூலம் பாரம்பரிய கலை, சமய பண்பாடு மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b