Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
விஜய் மீது வழக்கு பதிவு செய்தது தெரியவில்லை. தம்பி மீது பாதுகாப்பு குறைபாடு என சொல்லி இருக்கிறார். களத்தில் நின்றவர் அவர் அவருக்குத்தான் தெரியும். என்ன பாதுகாப்பு குறைபாடு என அவர்தான் சொல்ல வேண்டும்.
நான் காவல்துறையிடம் பாதுகாப்பே கேட்பதில்லை. அதை எதிர்பார்ப்பதில்லை. அதனால் எனக்கு அந்த பிரச்சனை இல்லை.
90% இந்துக்கள் தான் என சொன்னது யார் திமுக தான். இஸ்லாமியர்கள் வாக்கை தக்க வைப்பதற்காக வருபவன் போகிறவனை எல்லாம் B Team.
ஐந்தாண்டு காலம் வாஜ்பாய்க்கு நிலையான ஆட்சியை கொடுக்க வைத்தது யார்? தேவையில்லாமல் வரவன் போறவனை எல்லாம் B Team என்றால் A Team என்று இருக்க வேண்டும். அந்த A Team தான் திமுக.
தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள் அது இலவச அறிவிப்பு.
கல்விக்கடனுக்கு ரூ. 20 லட்சம் தருகிறேன் என்கிறார்கள். கந்துவட்டி கடை, வங்கி நடத்துகிறாயா? அரசு கல்விக்கு கடன் கொடுக்கிறது. மக்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
நான் 2000 கொடுக்கிறேன், 2500 கொடுக்கிறேன் என்கிறார்கள். ஒருவர் மூன்று சிலிண்டர் என்கிறார் ஒருவர் ஆறு சிலிண்டர் என்கிறார். எங்கிருந்து கொடுப்பீர்கள்? ஏன் என் மக்களை இப்படி ஏமாற்றுகிறீர்கள்?
டோக்கன் கொடுக்கிறேன் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். 6 லட்சம் பேர் தாலியத்தை அறுத்துவிட்டு குடும்பத்திற்கு 2000 கொடுப்பது எப்படி?
காவல்துறை, அரசு மருத்துவர், செவிலியருக்கு சம்பளம் இருக்காது. பஸ் ஓசி, நடத்துனர் ஓட்டுனருக்கு உங்கள் சொத்தை விற்று சம்பளம் கொடுப்பீர்களா?
சொந்த நாட்டு மக்களுக்கு கடனை வைத்து விட்டு செல்பவன் நல்ல தலைவனா
2000க்கும் 2500க்கும் தான் போட்டி. திமுகவை ஒழிக்க வேண்டும் சரி, ஏன் ஒழிக்க வேண்டும் என சொல்ல வேண்டும். பாஜக கொள்கை எதிரி. எந்த இடத்தில் கொள்கை எதிரி, உன் கொள்கை என்ன என்று சொல். நீ கொள்கை எதிரியா இல்லையா என்று சொல்கிறோம்.
முதலமைச்சர் சைக்கிளில் தானே செல்கிறார். பார்க்கிறீர்களே அவர் சைக்கிள் ஓட்டி பார்த்ததில்லையே? நம்புங்கள் ஒரு தலைவர் சொல்லும் போது நம்புங்கள்.
கார் கிடையாது... நடந்தா போகிறார்?, என கிண்டலாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J