Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 31 மார்ச் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பள்ளியில் படித்து வந்த 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர், மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2019 முதல் 2022 வரை மிரட்டி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam