குரூப் 1 மெயின் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு அடுத்தகட்ட நேர்முகத்தேர்வு ஏப்ரல் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம
TNPSC Announcement.


சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 86 ஆயிரம் 128 பேர் எழுதினர். தொடர்ந்து ஆகஸ்ட் 28ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது.

இதில் தற்காலிகமாக 1801 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான குரூப் 1 மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 1, 2ம் தேதி, 3ம் தேதி தேதி, 4ம் தேதி வரை நடந்தது.

இந்நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

குரூப் 1 மெயின் தேர்வுக்கு 1,801 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 1568 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கான 160 தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in எனும் இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b