Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)
சர்வதேச அளவிலான பாரா பேட்மிண்டன் தொடரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்ற மங்கை துளசிமதி முருகேசனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாரா பேட்மிண்டன் தொடரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தின் தங்க மங்கை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் முயற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையின் மூலம் பதக்கங்களைக் குவித்து ஒட்டுமொத்த தாய் திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் துளசிமதி முருகேசனின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b