Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 31 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணிசங்கர் (20) திருட்டு வழக்கிலும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்தோஷ் (19) கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.
இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு, இருவரும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam