மகாவீர் ஜெயந்தி - சமண சமய மக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.) பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை முன்னிட்டு, சமண சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வ
TTV Dhinakaran


Nd


சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)

பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை முன்னிட்டு, சமண சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கொல்லாமையும் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமையுமே உண்மையான அறம் என்பதை உலகிற்கு எடுத்துரைத்தவர் பகவான் மகாவீரர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன் சுகமான வாழ்க்கையைத் துறந்து அகிம்சை வழியில் நடந்து, இயற்கையோடு இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று மகாவீரர் போதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அறநெறியையும் ஆன்மீக நெறியையும் உலகிற்கு எடுத்துக்காட்டிய மகாவீரர் பிறந்த இந்த நாளில், அவரது போதனைகளை அனைவரும் பின்பற்றி மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தியை கொண்டாடும் சமண சமயத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ