வங்கி பெயரில் போலி முதலீடு மோசடி - தூத்துக்குடி காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி, 31 மார்ச் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு பிரபல தனியார் வங்கி பெயரில் போலியான முதலீட்டு திட்டம் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடி நடைபெற்று வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘Bank Securities’ என்ற பெயரில் அதிக
காவல்துறை


தூத்துக்குடி, 31 மார்ச் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு பிரபல தனியார் வங்கி பெயரில் போலியான முதலீட்டு திட்டம் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடி நடைபெற்று வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘Bank Securities’ என்ற பெயரில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி, மோசடியாளர்கள் முதலில் பொதுமக்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்த்து, போலியான லாப தகவல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.

பின்னர், உண்மையான வங்கி செயலிகளைப் போல தோற்றமளிக்கும் போலி மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் முதலீடு செய்ய வற்புறுத்துகின்றனர். இதனை நம்பி முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற முயன்றால், மேலும் பணம் செலுத்துமாறு கூறி தொடர்ந்து மோசடி செய்கின்றனர்.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, சமூக வலைதளங்களில் வரும் அதிக லாபம் தரும் முதலீட்டு திட்டங்களை நம்ப வேண்டாம் என்றும், SEBI அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு அல்லது இணையதளம் மூலம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam