தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் 5000 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டு கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள பிரச்சார வாகனத்தில் சென்றபோது அளவுக்கு அதிகமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் சூழ்ந்ததா
TVK Vijay


சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டு கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள பிரச்சார வாகனத்தில் சென்றபோது அளவுக்கு அதிகமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதனை அடுத்து திட்டமிட்ட இரண்டு தொகுதியின் பிரச்சாரத்தையும் ரத்து செய்து புறப்பட்டார்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் 5000 தவெக கட்சியினர் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரவள்ளூர் ஜங்ஷனில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சுமார் 3,000 பேர் கூடி நின்று சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நின்று கொண்டு கட்சி கொடியை வைத்திருந்ததாகவும், அனுமதி கேட்ட நேரத்திற்கு முன்னதாகவே சுமார் 3. 40 மணியளவில் தவெக தலைவர் விஜய் அவருடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் வந்தவர்களும் என மொத்தம் 5000 பேர் கூடி ஆம்புலன்ஸ் மற்றும் மற்ற போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாதபடி நடை பாதையில்

30 ஒலிபெருக்கிகள் அமைத்து அதிக சத்தத்துடன் விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் அதுமட்டுமில்லாமல் ரோடு ஷோவும் நடத்தி பொது போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதாகவும், தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டம் நடத்த மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யவும் ஐந்து சவுண்ட் பாக்ஸ் அமைக்கவும், 500 பேர் மட்டும் கூடி நிற்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் மீறல் ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் கொடுத்துள்ளார்.

முன்னதாகவே விஜய் 3.40 மணிக்கு வந்து ரூட் ஷோ நடத்தி 5000 பேர் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்க கூறி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் 223 - அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை,

126(2)- பொதுப்பாதையை மறித்தல், 189(2)- சட்டவிரோதமாக கூட்டப்பட்ட கூட்டம் என தெரிந்தே பங்கு கொள்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விஜய் மற்றும் 5000 தொண்டர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ