Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 31 மார்ச் (ஹி.ச.)
பாரதிய ஜனதா கட்சி, அசாம் மாநிலத்தில் தனது தேர்தல் அறிக்கை (சங்கல்ப பத்ரா)உருவாக்கும் பணியில், மக்கள் கருத்துக்களை நேரடியாகக் கேட்டு அறிந்துகொண்டதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று தெரிவித்தார்.
இது குறித்து சர்பானந்த சோனோவால்,செய்தியாளர்களிடம்பேசுகையில்,
இந்ததேர்தல் அறிக்கைஉருவாகும் பின்னணி இதுதான். நாங்கள் அசாமின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வீட்டுக்கு சென்று சந்தித்து, அடுத்த ஆட்சிக்காலத்தில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அவர்களின் ஆலோசனைகளை சேகரித்தோம்.
இறுதியில், மக்களின் ஆலோசனைகளே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை உருவாக்க உதவியது.
அசாம் மக்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் நாங்கள் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் செயல்பட திட்டமிட்டுள்ளோம். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை வழங்கியுள்ளனர்.
இது உண்மையான மக்கள் ஜனநாயகம்.கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, 100 இடங்களுக்கும் அருகில் போட்டியிட உள்ளோம்.
என்றுகூறினார்.
அசாம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தீவிரமான அரசியல் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM