Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி விட்டார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்காக, மத்திய அமைச்சரும் பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை தரவுள்ளார்.
பியூஷ் கோயல் பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து உத்தேச பட்டியல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதில் 2021 தேர்தலில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதி இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதனால், நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் குளச்சல் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இந்த தொகுதி புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா என தெரியவில்லை.
இதில் அண்ணாமலை பெயர் இல்லை.
அண்ணாமலைக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்டு பெறவில்லை என்ற அதிருப்தி அவருக்கு நிலவுவதாக சொல்லப்படுகிறது.
அது போல் பாஜக கூட்டங்களில் கூட அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b