ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொடூர கொலைகள் -முன்னாள் மனைவி  மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்ற கணவன்
ஆந்திரா, 04 மார்ச் (ஹி.ச.) ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், சீதானகரம் மண்டலம், பொப்பல்லங்கா சுபா ராவ் பேட்டைக்கு சேர்ந்த சோடதாசி சீதாராமராஜு (புனைப்பெயர்: பண்டு) தனது முன்னாள் மனைவி லதா (32) மற்றும் அவரது தாயார் (மாமியார்) கும்மடி லக்ஷ
கொலை


ஆந்திரா, 04 மார்ச் (ஹி.ச.)

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், சீதானகரம் மண்டலம், பொப்பல்லங்கா சுபா ராவ் பேட்டைக்கு சேர்ந்த சோடதாசி சீதாராமராஜு (புனைப்பெயர்: பண்டு) தனது முன்னாள்

மனைவி லதா (32) மற்றும் அவரது தாயார் (மாமியார்) கும்மடி லக்ஷ்மி (50) ஆகியோரை

கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும்

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீதாராமராஜு, லதா ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு மூன்று

குழந்தைகள் உள்ளனர். சீதாராமராஜு பைனான்ஸ் வியாபாரம் செய்து வந்தார். ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட சீதாராமராஜு ஒருமுறை POCSO வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

அந்தச் சமயத்தில் ஜாமீனுக்காக லதா தானே பைனான்ஸ் விவகாரங்களைக்

கவனித்துக்கொண்டார். ஜாமீனில் வெளியே வந்த பிறகு, சீதாராமராஜுவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

மனைவி யாருடனும் தகாத உறவு வைத்திருப்பதாகக்

கருதி, தினமும் துன்புறுத்தி வந்தார்.

ஒருமுறை மது போதையில் கடுமையாகத்

தாக்கியதால், காயங்களுடன் லதா சீதானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு அதிகரித்து, ஒரரை ஆண்டுக்கு முன்பு

அவர்கள் பிரிந்தனர்.

மூன்று குழந்தைகளும் தந்தையுடன் தங்கியுள்ளனர்.

பின்னர் சீதாராமராஜு, தனது வீட்டுக்கு எதிரே வசித்த குமாரி என்ற இளம் பெண்ணை

கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டார். அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கோருகொண்டா மண்டலம் கோடிகேஷ்வரம் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த லதா, சமீபத்தில் தனது தாய் கும்மடி லக்ஷ்மி வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த சீதாராமராஜு, தன்னை விட்டுச் சென்ற முன்னாள் மனைவி சுகமாக

வாழ்வதாகவும், குழந்தைகளின் பொறுப்பு தனக்கே வந்துள்ளதாகவும் கோபத்தில் மனைவி

லதாவைக் கொல்லத் திட்டமிட்டார்.

அதேபோல, இரவு கத்திகளை எடுத்துக்கொண்டு மூன்று நண்பர்களுடன் மாமியார்

வீட்டுக்குச் சென்றார். இருவர் வாசலுக்கு வெளியே நின்றனர்; மற்றொருவர் கதவு

அருகில் நின்றார். வீட்டுக்குள் சென்ற சீதாராமராஜு, தூங்கிக்கொண்டிருந்த லதாவை கை, தோள், கழுத்து, முகம் என கண்மூடித்தனமாக வெட்டினார்.

இதில் அலறி துடித்த லதாவின் கூச்சலைக்கேட்டு ஓடிவந்து தடுக்க முயன்ற மாமியார் லக்ஷ்மியையும்

வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி, கத்தியை கோதாவரி ஆற்றில் வீசிவிட்டு தப்பிச்

சென்றனர்.

தகவல் கிடைத்ததும் ராஜமஹேந்திரவரம் நார்த் ஜோன் டிஎஸ்பி ஸ்ரீகாந்த்,

கோருகொண்டா சிஐ எஸ்விவிஎஸ் மூர்த்தி சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை

தொடங்கினர். போன் இருப்பிடத்தின் அடிப்படையில் அருகிலுள்ள ஊரில் மறைந்திருந்த

சீதாராமராஜுவை கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பினர்.

குற்றவாளிக்கு ஏற்கனவே குற்றச் சரித்திரம் உள்ளது; 12 ஆண்டுகளுக்கு முன்

சாலையில் ஒருவரைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக இருந்தார் என போலீசார்

தெரிவித்தனர்.

இப்படிப்பட்டவன் உயிருடன் இருக்கக்கூடாது என அழுது இறந்தவர்களின் குடும்பத்தினர் போலீசாரிடம் வேதனை தெரிவித்தனர்.

உடல்களை

பிரேதப் பரிசோதனைக்காக ராஜமஹேந்திரவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கொலைகளுக்கு உதவிய மூன்று நண்பர்கள் தப்பியோடியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam