Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 04 மார்ச் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.
இன்று 194- வது அவதார தினத்தை ஒட்டி அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து அய்யா அவதார தின விழா ஊர்வலம் சாமி தோப்புக்கு
புறப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் செண்டை மேளங்கள் முழங்க பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகில திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் செல்ல தொடர்ந்து
காவி உடை நெற்றியில் திருநாமம் தலையில் தலைப்பாகை அணிந்த ஆயிரக்கணக்கான
அய்யாவழி பக்தர்கள் காவிக் கொடி ஏந்தியும் அய்யா சிவசிவ அரகர சிவ சிவ என்ற பக்தி கோஷத்தை முழங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலத்தில் கன்னியாகுமரி
நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அய்யாவழி பக்தர்கள் திரளான
பேர் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலத்தை ஒட்டி
நாகர்கோவிலில் இருந்து சாமி தோப்பு தலைமை பதிக்கு சிறப்பு பேருந்துகளும்
இயக்கப்படுகின்றன. அய்யா அவதார தின விழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு
உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அய்யாவழி பக்தர்கள் கோட்டார் கரியமாணிக்கபுரம் வடக்கு தாமரை குளம் வழியாக இந்த ஊர்வலம் சாமிதோப்பில் உள்ள
அய்யா வைகுண்டர் தலைமை பதியை சென்றடையும்.
பின்னர் பூஜைகள் அன்ன தர்மம்
நடை பெறுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam