மஹாராஷ்டிராவில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
புதுடெல்லி, 04 மார்ச் (ஹி.ச.) நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காலி
BJP releases list of candidates for Rajya Sabha elections in Maharashtra


புதுடெல்லி, 04 மார்ச் (ஹி.ச.)

நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜ தலைமையானது கடந்த சில நாட்களாக அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பீஹாரில் இருந்து பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அசாமில், தேராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சத்தீஸ்கரில் இருந்து லட்சுமி வர்மா போட்டியிடுகிறார். ஹரியானாவில் இருந்து சஞ்சய் பாட்டியா, ஓடிசாசில் இருந்து சுஜித்குமார், மன்மோகன் கமல் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜ தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 4 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, வினோத் தாவ்டே, மாயா சிந்தாமன் இவ்னேட் மற்றும் ராம்ராவ் வாட்குடே ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b